Dinakaran Newspaper Contact No. 044-4220 9191

Organization: 
All India Number(s): 
  • 044-4220 9191 (For Newspaper/Website Advertisement)
  • 72990 27440 (For Online Advertisement)

Emails

  • info [at] dinakaran [dot] com (For News Desk)
  • kannappan [at] dinakaran [dot] com(For Online Advertisement)
  • dotcom [at] dinakaran [dot] com (For Support)

Important Link

Office Address

229, Kutchery Rd, Vinayaka Nagar Colony,
Mylapore, Chennai, Tamil Nadu 600004
Contact No.: 044-42209191, Extn: 21240, 21241, 21102 (For Newspaper Ads)

Social Sites

Comments

27 திமுக விசுவாச அலுவலக உதவியாளர்களின் வேதனை பதிவு..

இது சட்டப்பேரவை செயலகத்தில் பணி புரியும் ஒரு கடைநிலை தீவிர திமுகவின் விசுவாசியின் வேதனை பதிவு. கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் சட்டமன்றப் பேரவையில் அலுவலக ஊழியராக 2010 யில் ஆணை வாங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது 2011ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் வேலையில் இருந்து தூக்கப்பட்டோம்.

மேலும் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து அதில் எங்களைப் போடும் வரை வேறு யாரையும் அந்த இடத்தில் போட கூடாது என இடை நிறுத்த உத்தரவை பெற்றோம்(stay order ).

பத்து வருடங்களாக எங்கள் யாரையும் சட்டமன்ற செயலகத்திற்குள் அனுமதிக்கவில்லை மேலும் இவ்வழக்கான நிலுவையிலேயே இருந்தது இதற்கிடையில் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் மறுபடியும் சட்டமன்ற பேரவையில் வேலைக்கு அமர்த்தபட்டோம். மேலும் எங்கள் வழக்கு ஆனது மாண்புமிகு சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் திரு சீனிவாசன் ஆகிய இருவரும் இதற்கு முன் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது போல் அனைத்து சலுகைகளையும் தருகிறோம் என்ற வாக்குறுதியின் படி எங்கள் வழக்கை வாபஸ் பெற்றோம்.

ஆனால் நமது ஆட்சி பொறுப்பேற்று வெற்றிகரமாக மூன்றாண்டுக்கு மேல் ஆகியும் பணி வரன்முறை சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை . மேலும் இதைப்பற்றி சட்டமன்ற பேரவை செயலாளர் அவர்களிடம் கேட்டதற்கு உங்கள் கோப்னது கண்டிப்பாக விரைந்து முடிக்கப்படும் என்ற வாக்குறுதியை மட்டுமே கொடுத்து கொண்டு இருந்தார். மேலும் அவரின் வாக்குறுதியை நம்பி இத்தனை நாள் பொறுமையாக இருந்தோம். ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது வழக்கை வாபஸ் பெற்றது தவறு என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து அதற்கான ஆணையை பெற்று வருமாறு நிர்பந்திக்கிறார். மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் இதில் தலையிட்டு விரைந்து அனைவருக்கும் பழைய
முன் நிகழ்வின் அடிப்படையில் அவர்கள் வேண்டிய சலுகையை செய்து தருமாறு பலமுறை அறிவுறுத்தியும் அதற்குண்டான எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் தன்னுடைய மேஜையிலேயே பல மாதங்கள் வைத்துக்கொண்டு எங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்.
.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இச்செய்தி தற்போதைய துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு சென்று அவரும் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் கூடிய பணிவரன் முறை செய்து தருமாறு உத்தரவு இட்டும் அதன் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது

சாலை ஆக்கிரமிப்பு

வணக்கம் ஐயா. நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா, மஞ்சூர் பகுதியில் அரசு மருத்துவமனையின் அருகில் நெடுஞ்சாலையில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து தி.மு.க. வட்ட துணை செயலாளர் .சிவக்குமார் பள்ளிமனை, மஞ்சூர் பகுதியில் வசிக்கும் இவர் மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பு செய்து இரண்டு வீட்டு மனைகள் புதிதாக கட்டி 10000 ரூபாய் வீதம் வாடகைக் விட்டுள்ளார்.இதனால் இரண்டு பேருந்துகள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.மேலும் இந்த இடத்தில் எதிரே பஸ் வந்தால் மற்றொரு திசையில் பேருந்து நின்று காத்திருந்து செல்லவேண்டும். ஏற்கனவே இந்த இடத்தில் மருத்துவ மனைக்கு செல்பவர்களுக்கு நிழற்குடை அமைக்க இருந்த இடமாகும். எனவே பொதுமக்களின் நலன் கருதி அரசுக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீட்டை இடித்து பேருந்துகள் செல்ல இடையூறு இல்லாமல் சம்பந்தப்பட்ட மாவட்ட நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.